×

3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 244 பேர் மீது கிரிமினல் வழக்கு: பெண்கள் 9% மட்டுமே

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் 94 தொகுதிகளில் வரும் மே 7ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், 3ம் கட்ட தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் மூலம் அவர்களைப் பற்றிய விவரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் 1,352 பேரில் 123 பேர் (9 சதவீதம்) பெண்கள் ஆவார்.
* 244 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 5 பேர் மீது கொலை வழக்கும், 24 பேர் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. 7 பேர் குற்ற வழக்குகளில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள்.
* 38 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. 17 பேர் வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ளன.

* 392 வேட்பாளர்கள் (29 சதவீதம்) கோடீஸ்வரர்கள் ஆவார். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.66 கோடி.
* சொத்துக்கள் அடிப்படையில் முதல் 3 இடங்ளில் உள்ளவர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர். அதிகபட்சமாக ஒரு வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.1,361 கோடி.
* கல்வி அடிப்படையில், 639 வேட்பாளர்கள் (47 சதவீதம்) 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். 591 வேட்பாளர்கள் (44 சதவீதம்) பட்டதாரிகள் ஆவார்.
* 411 வேட்பாளர்கள் (30 சதவீதம்) 25-40 வயதுக்கு உட்பட்டவர்கள். 712 பேர் (53 சதவீதம்) 41 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

The post 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,352 வேட்பாளர்களில் 244 பேர் மீது கிரிமினல் வழக்கு: பெண்கள் 9% மட்டுமே appeared first on Dinakaran.

Tags : New Delhi ,phase ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மோடி அரசுக்கு எதிராக முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்: ராகுல் வேண்டுகோள்